Site icon

விஜய்யின் அரசியல் பயணம் குறித்து ஓப்பனாக பேசிய நடிகர் நரேன்.. என்ன பேசியிருக்கிறார் தெரியுமா..!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர்   தான் இளைய தளபதி விஜய். இவர் தற்போது நடித்து கொண்டிருக்க கூடிய படம் தான் தளபதி 69.  இவர் அரசியலுக்காக சினிமாவில் இருந்து விலக போவதாகவும் கூறியுள்ளார். மேலும் சினிமாவில் ஒப்பந்தம் ஆகி இருக்கும் படங்களை மட்டும் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.மேலும்  இவர் நடிக்கும் கடைசி படம் இளைய தளபதி 69 ஆக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிக்கும் தளபதி 69 படத்தினை எச் வினோத் இயக்குகிறார்.

மேலும் இந்த படத்தில்  பிரகாஷ் ராஜ், நரேன், பூஜா ஹெஹ்ட் , மம்தா பாபி தியால் ஆகியோர் நடிக்கின்றனர்.  இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிரூத் இசையம்மைக்கிறார். இந்நிலையில் நடிகர் நரேன்  தளபதி 69 படம்  குறித்தும் விஜய்யின் அரசியல் பயணம் குறித்தும் பேசியுள்ளார். அதாவது தளபதி 69 படம் நன்றாக செல்கிறது. விஜய்யின் கடைசி படம் இதுதான் என்று நினைத்தால் கடினமாக உள்ளது.

அவர் அரசியலில் சாதிக்க வேண்டும் என நினைக்கிறார் அவருக்கு ஆதரவாக இருப்போம். எனவும் செய்தியாளர்களை சந்தித்த அவர்  பேசியுள்ளார். மேலும் இவர்  தளபதி 69 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் கமலின் விக்ரம் படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவர் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலமாக தமிழில் அறிமுகம் ஆனவர். மேலும் இவர் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவரின் விஜய் அரசியல் குறித்த பதிவு விஜய் ரசிகர்களுக்கு உற்ச்சாகத்தை அளித்துள்ளது.

Exit mobile version