sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

நடிகர் மாதவன் மற்றும் இயக்குனர் மித்ரன் ஜவஹர் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் அறிவிப்பு… வெளியான தகவல்கள்…!

Sodukki News · 04 Nov 2024, 06:29 AM

தமிழ் சினிமாவில் அதிக அளவில் ரசிகர்களை கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் மாதவன். இவர் தற்போது நடித்து வரும் படத்தினோட அப்டேட் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது இவர் தற்போது நடிக்கும் படத்தினை இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கிவருகிறார். இவர் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன், திருச்சிற்றம்பலலம் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர்.

இவர் சிறிது கால இடைவேளைக்கு பிறகு தற்போது நடிகர் மாதவனை வைத்து படம் எடுத்துள்ளார். இந்த படத்தின் கதையினை ஜெயமோகன் எழுதியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் காதநாயகியாக மடோனா ஜெபஸ்டின் நடித்துள்ளார்.

இந்த படத்தின் பட பிடிப்புகள் பெரும்பாலும் லண்டனில் எடுக்கப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு "அதிஷ்டசாலி" என பெயர் சூடப்படுள்ளது. மேலும் இந்த படத்திற்கான டீசர் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தினை ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

Comments (0)

Login to join the conversation.