sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

நடிப்பில் மிரட்டும் வில்லன் தான்… ஆனாலும் கிசுகிசுவில் சிக்காத நடிகர்… இவர் யாரென்று தெரிகிறதா?

Sodukki News · 18 Jul 2023, 09:41 AM

பிரபல நடிகர் ஒருவரின் வாலிப வயது புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அவர் வில்லன் நடிகர் தான். ஆனால் தன் வாழ்வில் எந்த கிசு, கிசுவிலும் சிக்காதவர். அவர் யாரென்று தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

நடிகர் நெப்போலியனுக்கு தமிழ்நாட்டில் அறிமுகமே தேவையில்லை. கிராமத்து கதைக்களத்தில் நெப்போலியன் ஒரு வாசத்தையே ஏற்படுத்தி விடுவார். தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக பெரிதாக தலைகாட்டாத நெப்போலியன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றார்.

நெப்போலியன் கிராமத்து சப்ஜெக்ட்களில் வில்லத்தனம் காட்டியவர் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் பாரதிராஜா இயக்கத்தில் தமிழ்சினிமாவுக்குள் என்ட்ரி ஆனவர் நெப்போலியன். இவரது மனைவி ஜெயசுதா. இவருக்கு தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் என இருமகன்கள் உள்ளனர். தற்போது இவர் குடும்பத்துடன் அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் வசித்து வருகிறார்.

கிராமத்து சப்ஜெட்டில் தொடை தெரியும் அளவுக்கு வேட்டிகட்டி அசத்தலான நடிப்பை வழங்கும் நெப்போலியன், தற்போது ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ என்னும் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கோர்ட்னி மேத்யூஸ், ஷீனா மோனின் ஆகியோர் நடிக்க டேனியல் இயக்கியுள்ளார். அழகி செனிசுலா இதில் நெப்போலியனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஏற்கனவே ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்துள்ள நெப்போலியனுக்கு இது இரண்டாவது படம்.

நடிகர் நெப்போலியனின் மூத்தமகனான தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். இதனாலேயே இவர் வீல்சேரிலேயே வாழ்க்கையையும் நகர்ந்துகிறார். நெப்போலியன் அரசியல், சினிமா என பிஸியாக இருந்தபோதே தன் மகனின் சிகிட்சை, படிப்புக்காக அமெரிக்காவுக்கு போய் குடியேறி இருந்தார்.

வீல்சேரில் இருந்தே இயங்கிவரும் நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ், பி.ஏ அனிமேஷன் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம்வாங்கியுள்ளார். இதற்குப்பின்னால் நடிகர் நெப்போலியனின் பத்தாண்டு உழைப்பு இருக்கிறது. நெப்போலியன் இதுவரை எந்த கிசு,கிசுவிலும் சிக்கியதே இல்லை.

இரவு பார்ட்டி, நடிகைகளுடன் கிசு, கிசு என எந்த சர்ச்சையிலும் சிக்காமலே இண்டஸ்ட்ரியில் இன்னும் தனக்கான நல்ல பெயரைத் தக்க வைத்திருப்பவர் நெப்போலியன். சக நடிகைகளிடம் எப்போதும் மிகவும் கன்னியமாக நடந்து கொள்வார் நெப்போலியன். அதனால் இன்று வரை எந்த கிசு, கிசுவிலும் அவர் சிக்கியது இல்லை. அவரது இளமைக்கால புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

pic1

pic2

pic3

Comments (0)

Login to join the conversation.