sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

மதம் பேதம் பார்க்காமல் பழகும் அஜித்… வெகு விமர்சையாக பாராட்டிய நடிகர் சத்யராஜ்..!

Sodukki News · 09 Nov 2024, 05:09 AM

புரட்சி தலைவர் என்று அழைக்கப்படும் நடிகர் சத்யராஜ் தமிழ் திரையுலகில் நடிகர்கள் கமல், ரஜினி காலகட்டத்தில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டவர். இவர் தமிழ் சினிமாவிற்கு பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவர் ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் குணசித்திர கதா பாத்திரமாகவும் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் இவர் இன்றளவும் தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பினை சின்ன சின்ன கதாபாத்திரத்தில் வெளிக்கொண்டு வந்து இருக்கிறார்.

தற்போது இவர் சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கு மேடையில் பேசும் பொழுது நடிகர் அஜித்தின் சேவை மனப்பான்மை பற்றி பேசியுள்ளார். அதாவது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் செய்வதை எந்த ஒரு விளம்பரமும் செய்யாமல் எளிய முறையில் சமூக சேவை செய்து வருகிறார் நடிகர் அஜித் என பேசியுள்ளார். மேலும் அவர் பேசும் பொழுது அஜித் மத பேதம் பார்க்காமல் எல்லாரிடமும் அன்பாக பழகுவர் எனவும்

மேலும் அஜித் சமீபத்தில் பதிவிட்ட ஒரு பதிவில் சம்மந்தமே இல்லாமல் ஒரு நபர் மீது கோவம் வருகிறது என்றால் அதற்க்கு கரணம் மதம் தான் எனவும் மேலும் ஒரு நாட்டிற்க்கு செல்கிறோம் அப்போது தெரியாத ஒரு நபரை பார்க்கிறோம் எங்களுக்கும் அவங்களுக்கும் இடையில் எந்த வித சண்டையும் இல்லை இருந்தும் பிரச்சனை வர காரணம் மதம் தான் என பதிவிட்டுள்ளார். இதனை பற்றி பேசிய சத்யராஜ் அஜித்தை வெகு விமர்சையாக பாராட்டி பேசியுள்ளார் . இந்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Comments (0)

Login to join the conversation.