காதல் கணவருடன் தேனிலவு.. சும்மா மாஸ் பன்றாங்க ஐஸ்வர்யா அர்ஜுன்.. வைரலாகும் புகைப்படங்கள்..!
Sodukki News · 09 Nov 2024, 04:45 AM

தமிழ் சினிமாவில் 90's காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் ஆக்க்ஷன் கிங் அர்ஜுன். அன்று முதல் இன்று வரை அவருடைய சினிமா பயணம் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறதுமேலும் இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இவர் இன்று வரை பெரிதளவில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். மேலும் அவர் இன்றய காலகட்டத்தில் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துவருகிறார்.

மேலும் இவருடைய மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. அவரையும் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் ஐஸ்வர்யா ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு சிலமாதங்களுக்கு முன்பாகத்தான் இவர்களுடைய திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிலயில் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி ஜோடி இப்போது ஹனீமூன் சென்றுள்ளனர். அந்த போட்டோஸ்களை ஐஸ்வர்யா அர்ஜுன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போடோஸ்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.
pic1

pic2

pic3
