sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

நயன் என கத்திய சிறுவன்.. பதிலுக்கு நயன்தாரா கொடுத்த க்யூட் ரியாக்சனை பாருங்க… ட்ரெண்டிங் ஆகும் வீடியோ..!

Sodukki News · 28 Oct 2024, 10:07 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவருக்கு பெரிதளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் இவர் இறுதியாக ஹிந்தி நடிகர் ஷாருகான் உடன் இணைந்து ஜவான் படத்தினை நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் நயனும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணம் பெரும் விமர்சையாக நடந்தது. மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நயனுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் உயிர் மற்றும் உலக் என 2 மகன்கள் இருக்கின்றனர்.தற்போது நயன் யாஷ் நடிக்கும் டாக்சிக் படத்திலும் மேலும் நிவின் பாலியுடன் இணைந்து மலையாளத்தில் டியர் ஸ்டுடன்ஸ் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

டியர் ஸ்டுடன்ஸ் படத்தின் பட பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது ஒரு சிறுவன் நயன் என கத்தியுள்ளான் இதனை பார்த்த நயன் சாப்டியா போய் தூங்கு என்று தன்னுடைய கை சைகையால் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Comments (0)

Login to join the conversation.