sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

ட்ரெண்டிங் உடையில் ஹாட் போஸ் கொடுக்கும் நயன்தாரா… அசத்தலான போட்டோஷூட் வைரல்..!

Sodukki News · 07 Nov 2024, 09:42 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இருபது ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை அமைத்து கொண்ட இவருக்கு பெரிதளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்தார். சமீபத்தில் ஹிந்தி நடிகர் ஷாருகான் உடன் இணைந்து ஜவான் படத்தினை நடித்து பாலிவுட்டிலும் தன்னுடைய தடத்தை பதித்துவிட்டார். மேலும் இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.

மேலும் நயனும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் பெரும் விமர்சையாக நடந்தது. மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நயனுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் உயிர் மற்றும் உலக் என 2 மகன்கள் இருக்கின்றனர். சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதில் தவறுவதில்லை. மேலும் நயன் யாஷ் நடிக்கும் டாக்சிக் படத்திலும் நிவின் பாலியுடன் இணைந்து மலையாளத்தில் டியர் ஸ்டுடென்ட்ஸ் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் அவர் தன்னுடைய குடும்பத்தினருடன் தான் செலவழிக்கும் நேரத்தில் எடுக்கும் போட்டோஸ்களை தன்னுடைய இணையதள பக்கத்தில் வெளியிடுவார். இந்நிலையில் தற்போது ட்ரெண்டிங் உடையில் ஷர்ட் பட்டனை கழட்டி விட்டு கிளாமரா ஹாட் போஸ் கொடுத்து அந்த போட்டோஸ்களை தன்னுடைய இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ்களை வைரலாக்கும் விதமாக அவரது ரசிகர்கள் காட்டு தீ போல் பரப்பி வருகின்றனர்.

Comments (0)

Login to join the conversation.