sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

நடிகை திரிஷாவா இது.. மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்ட போட்டோஸ் வைரல்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

Sodukki News · 25 Nov 2024, 09:18 AM

தமிழ் சினிமாவில்  மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி நடித்தவர் தான் நடிகை திரிஷா. இவர் நடித்த முதல் படமே இவருக்கு வெற்றி என்றே சொல்லலாம். அதனை தொடர்ந்து பல படங்களை நடித்திருந்தார். இவர் நடிப்பில் வெளிவந்த கில்லி, மற்றும் சாமி திரைப்படம் இவருக்கு மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. அஜித், விஜய்,சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.  மேலும் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

மேலும் இவர் சினிமாவில் 20 ஆண்டுக்கால பயணத்தை வெற்றி கரமாக நடித்து தக்க வைத்து வருகிறார். தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும்  இவர் தற்போது அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அஃலி படத்திலும் கதாநாயகியாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் இவர் ஹீரோயினாக அறிமுகம் ஆவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்தவர். அதுமட்டும் அல்லாமல் 1991 ம் ஆண்டு நடந்த மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டு மிஸ் சென்னை பட்டத்தை பெற்றவர். மேலும் இவர் 2001 ம் ஆண்டு மிஸ் பீயூட்டி புல் ஸ்மைலி பட்டத்தையும் பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது மிஸ் சென்னை போட்டியில் அவர் கலந்து கொண்ட போட்டோஸ்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. த்ரிஷாவா இது என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

pic1

pic2

pic3

pic4

Comments (0)

Login to join the conversation.