sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

TVK மகளிர் அணி தலைவி வாழ்க.. விஜய்க்கு வாழ்த்து சொன்ன வனிதாவை வம்பிழுக்கும் ரசிகர்கள்..!

Sodukki News · 28 Oct 2024, 07:17 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் தான் இளைய தளபதி விஜய். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இவர் தற்போது நடித்து கொண்டிருக்க கூடிய படம் தான் தளபதி 69. மேலும் இளையதளபதி விஜய் சமீபத்தில் அரசியல் பயணம் மேற்கொள்ளலாம் என நினைத்து தமிழக வெற்றி கழகம் ஒன்றை உருவாக்கி உள்ளார். மேலும் இவர் அரசியலுக்காக சினிமாவில் இருந்து விலக போவதாகவும் கூறியுள்ளார். மேலும் சினிமாவில் ஒப்பந்தம் ஆகி இருக்கும் படங்களை மட்டும் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

மேலும் இவர் நடிக்கும் கடைசி படம் இளைய தளபதி 69 ஆக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சினிமாவில் இருந்து விலக போறது அவருடைய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி. மேலும் இவரின் தமிழக வெற்றி கழகத்தின் பணியினை இவர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்டு வருகிறார். மேலும் இவரின் முதல் மாநாடு நடக்க இருக்க நிலையில் பல பிரபலங்கள் இவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை வனிதா விஜய குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜயுடன் இணைந்து நடித்த படத்தின் போட்டோவினை பதிவிட்டு வாழ்த்தினையும் கூறி உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தமிழக வெற்றி கழகத்தின் தலைவியே வாழ்க எனவும் உங்களின் கல்யாணத்துக்கு கழகத்தின் தலைவர் வருவாரா எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் தளபதியை வாழ்த்துவதற்கு இந்த போட்டோவை தான் தங்கள் பயன்படுத்த வேண்டுமா என்றும் கிண்டலாக வனிதாவை வம்பிழுத்தும் வருகிறார்கள். இந்த பதிவுகள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Comments (0)

Login to join the conversation.