கோலாகலமாக நடந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவின் மகள் பெயர் சூட்டு விழா.. வெளியானது கலக்கலான புகைப்படங்கள்..!
Sodukki News · 08 Nov 2024, 06:25 AM

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ராஜா ராணி சீரியலில் அறிமுகம் ஆனவர் தான் ரித்திகா. இவர் அந்த தொடரில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிதளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் இவர் தன்னுடைய திறமையால் வாய்ப்புக்காக காத்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது தான் பாக்யலக்ஷ்மி சீரியல். இந்த சீரியலில் அமிர்தா என்ற பெயரில் இவர் நடித்திருந்தார்.

இந்த சீரியல் தான் இவருக்கு மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது.மேலும் இந்த சீரியல்க்கு பிறகு இவருக்கு ரசிகர்களும் அதிகமானார்கள். இதனை தொடர்ந்து இவருக்கு பல வாய்ப்புகள் கிடைக்கப்பட்டது. அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதனை அடுத்து காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவருடைய திறமையால் இவருக்கு வெள்ளித்திரையில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் சதீஷ் நடிப்பில் வெளிவந்த சட்டம் என் கையில் படத்தில் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் வினு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பாக்யலக்ஷ்மி சீரியலில் நடிப்பதை நிறுத்தினர். கர்ப்பமாக இருந்த இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. தன்னுடைய இணையதள பக்கத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் தற்போது தன்னுடைய மகளுக்கு பெயர் சுட்டு விழா நடத்தி உள்ளார். நிலா என்ற அருமையான பெயரை தன் குழந்தைக்கு வைத்துள்ளார் .அந்த புகைப்படங்களை தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த போட்டோஸ்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
pic1

pic2
