sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

சௌந்தர்யாவின் பொய்யான முகம் அம்பலம்.. சரமாரியாக விமர்சித்து பேசிய சனம் ஷெட்டி.. ட்விட்டர் மூலம் பதிலடி..!

Sodukki News · 09 Nov 2024, 05:53 AM

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை குறித்து பல பிரபலங்கள் விமர்சிப்பார்கள். அந்த வகையில் தற்போது போட்டியாளர் சௌந்தர்யா குறித்த ஒரு விமர்சன தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ் சினிமாவில் அம்புலி என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் சனம் ஷெட்டி. இதனை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் மிஸ் சவுத் இந்தியா அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

மேலும் இவர் பிக் பாஸ் சீசன்4 ல் கலந்து கொடு போட்டியாளராக 63 நாட்கள் இருந்தார்.இந்நிலையில் இவர் பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர் சௌந்தர்யா தான் ஆர் பி ஐ மூலமாக 17 லட்ச ரூபாய் இழந்ததாக மேலும் அது தன்னுடைய வீட்டிற்கு தெரியாது எனவும் கூறி இருந்தார். இதனை விமர்சிக்கும் விதமாக சனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது சுத்தமான உருட்டு எனவும் மேலும் சௌந்தர்யா பொய் கூறுகிறார் எனவும் விமர்சித்து பேசிருந்தார். இதற்க்கு பதிலடி கொடுத்து சௌந்தர்யா தரப்பில் இருந்து உண்மைதான் என்று ஆதாரத்தை வெளியிட்டிருந்தார்கள்.

அதாவது பிக் பாஸ் வீட்டில் ஆர் பி ஐ மற்றும் சி பி ஐ பேசுகிறோம் என மிரட்டி உங்களுடைய அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவோம் என மிரட்டி கொஞ்சம் கொஞ்சமா 17 லட்சம் வரை வாங்கி விட்டார்கள் என சௌந்தர்யா பேசியிருந்தார் . இது கதை தான் சௌந்தர்யா நல்லா பொய் கூறுகிறார் என பலரும் கமெண்ட் செய்திருந்தார்கள். அந்த வகையில் சனம் செட்டியும் சௌந்தர்யா ஒரு ஸ்பேம் எனவும் அவருடைய பொய் முகம் வெளிவந்தது எனவும் கூறியிருந்தார். அதற்க்கு பதிலடி கொடுக்கும் படியாக சௌந்தரியா தரப்பில் இருந்து அவர்கள் கொடுத்த போலீஸ் கம்ப்ளண்ட் எப்ஐ ஆர் நகலை ட்விட்டர்ல் பதிவிட்டுள்ளது. இந்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Comments (0)

Login to join the conversation.