sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

BB8 வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளர்களின் சம்பளம்.. வெளியான தகவல்கள்..!

Sodukki News · 14 Nov 2024, 05:10 AM

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த நிலையில் போட்டியாளர்களாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு என்று பெரிதளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல் வாரம் ரவீந்தர் எலிமினேட் ஆனார். இரண்டாவது வாரம் அர்னவ் எலிமினேட் ஆனார். அதை தொடர்ந்து  தர்ஷா குப்தா வெளியேறினார் அதை தொடர்ந்து சுனிதா வெளியேறினார்.

தற்போது 14 போட்டியாளர்கள் உள்ளனர். மேலும்  வைல்ட் கார்டு என்ட்ரியில் 6 போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்தனர். அவர்கள் ராயன், சிவகுமார், ராணாவ், வர்ஷினி வெங்கட், ரியா மற்றும் வெங்கட். தற்போது இவர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதாவது தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வில்லனாக பிரபலம் ஆன ராயனுக்கு ஒரு நாளைக்கு ரூ. 15,000 சம்பளமும் சிவகுமார், ராணவ் மற்றும் வர்ஷினி வெங்கட்க்கு ரூ. 12,000 சம்பளமும் ரியா மற்றும் மஞ்சரிக்கு ஒரு நாளைக்கு ரூ. 10,000 சம்பளமாகவும் வழங்கப்படுகிறதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Comments (0)

Login to join the conversation.