sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

எதிர்மறை விமர்சனங்களை பெற்ற பிரதர்ஸ் படத்தின் இறுதி வசூல்.. வெளியான தகவல்கள்..!

Sodukki News · 12 Nov 2024, 09:09 AM

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவருக்கு இப்போதெல்லாம் இவர் நடிக்கும் படம் எதுவும் வெற்றி படமாக அமைந்ததாக இல்லை. இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் இவர் சமீபத்தில் நடித்து வெளியான படம் பிரதர்ஸ்.

இந்த  படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும் மேலும் பூமிகா, நட்டி, விடிவி கணேஷ் என பல பிரபலங்கள் நடித்திருக்காங்க. இந்த படத்தை ரசிகர்கள் ரொம்ப எதிர்பார்த்து இருந்தாங்க அனால் வெகு விமர்சைய சந்திச்ச இந்த படம் வசூல் ரிதியாக தோல்வியையே அடைந்திருக்கு.

இந்த நிலையில் பிரதர்ஸ் படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது இந்த படம் உலகளவில் இறுதியாக ரூபாய் 12 கோடி மட்டுமே வசூல் பெற்றுள்ளதாம். இந்த படத்தை ரொம்ப எதிர்பார்த்து இருந்த படக்குழுவினருக்கு ஏமற்றத்தையே இந்த படம் தந்துள்ளது.

Comments (0)

Login to join the conversation.