sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய சந்திரமுகி பட பொம்மி.. வெளியானது அவருடைய லேட்டஸ்ட் போட்டோஸ்..!

Sodukki News · 06 Nov 2024, 06:54 AM

தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமாக வலம் வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவர் நடித்த படங்கள் பல சூப்பர் ஹிட் படங்கள் தான். இருப்பினும் சில படங்கள் டாப் டென் வரிசையில் அமைந்தது போல மெகா ஹிட் அடித்திருக்கும். அந்த வகையில் அவர் நடிப்பில் வெளிவந்த படம் தான் சந்திரமுகி. இந்த படம் வசூல் ரீதியாகவும் சரி கதை ரீதியாகவும் சரி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் அனைவருமே தங்களுடைய நடிப்பை அற்புதமாக கச்சிதமாக நடித்திருப்பார்கள்.

சந்திரமுகி பாகம் ஒன்று வெற்றியினை தொடர்ந்து பாகம் 2 எடுக்கப்பட்டது. அதுவும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றியினை கண்டது. சந்திரமுகி பாகம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக பொம்மி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பிரகர்ஷிதா. இவர் பொம்மி கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருப்பார். இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும் இவர் பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. மேலும் இவர் தன்னுடைய திருமண வாழ்க்கையில் எடுப்படத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதற்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இந்நிலையில் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தன்னுடைய புகைப்படங்களை தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்து பலர் சந்திரமுகி பொம்மியா இது என ஆச்சரியமாக கேட்டு வருகிறார்கள்.

pic1

pic2

Comments (0)

Login to join the conversation.