sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

தந்தையின் வாழ்க்கையை படமாக்கும் மாரி செல்வராஜ்.. மாரி செல்வராஜ் உடன் கூட்டணி சேரும் பிரபல ஹீரோ..!

Sodukki News · 30 Oct 2024, 05:28 AM

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் தான் மாரி செல்வராஜ். இவர் முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவே அமைந்துள்ளன. இவருக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில் பரியேறும் பெருமாள் முதல் கர்ணன், மாமன்னன் என வெற்றி படங்களையே கொடுத்து வரும் இவர் தன்னுடைய வாழ்க்கை கதையை வைத்து விஜய் சேதுபதி நடிப்பில் வாழை என்ற படத்தினை இயக்கினார்.

சூப்பர் ஹிட் அடித்த இந்த படம் சினிமா வாழ்க்கையில் அவருக்கு ஒரு நல்ல மதிப்பை பெற்று கொடுத்தது. இந்த படத்தினை ரசிகர்கள் பாராட்டியும் கொண்டாடியும் வருகிறார்கள். மேலும் மாரி செல்வராஜ் நடிகர் விக்ரம் மகனான துருவ் விக்ரம் உடம் பைசன் என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்க இருப்பதை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் உறுதி செய்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் தன்னுடைய அப்பாவின் வாழ்க்கை கதையை வைத்து மாரி செல்வராஜ் படம் எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த படத்துக்கான கதையை ஒரு லைன் மட்டும் கார்த்திக்கிடம் சொன்னதாகவும் இதில் நடிப்பதற்கு கார்த்தி ஒப்பு கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த படத்தினை குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் மேலும் இந்த ஆண்டின் இறுதியில் இந்த படத்துக்கான படப்பிடிப்பு வேலை தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)

Login to join the conversation.