sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

வாவ்..சும்மா அசத்தலான திருமண மண்டபத்தை கட்டியிருக்கும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை… குவியும் பாராட்டுக்கள்…!

Sodukki News · 29 Oct 2024, 05:06 AM

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆன தொடர் தான் எதிர்நீச்சல். இந்த சீரியல்க்கு என்று பெரிதளவில் ரசிகர்கள் கூட்டம் உண்டு. இந்த சீரியல் மூலமாக பிரபலம் ஆனவர் தான் நடிகை சத்யா. இவர் சன் மியூசிக் நிகழ்ச்சி மூலமாக தான் முதலில் அறிமுகம் ஆனவர். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் அருவி என்னும் சீரியலில் தான் முதலில் நடித்தார். இவருக்கு எதிர்நீச்சல் சீரியல் தான் மிக பெரிய அளவில் திருப்பு முனையாக இருந்தது. இந்த சீரியலில் நான்கு அண்ணன்களுக்கு ஒரு தங்கையாக நடித்திருப்பார்.

மேலும் இந்த சீரியலின் கதை மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடிய கதையாக இந்த சீரியல் கதை இருக்கும். மேலும் அப்பா பொண்ணு பாசம் போன்ற கதைக்களத்தை வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த சீரியல் சமீபதில் முடிவடைந்தது. இதனுடைய இரண்டாம் பாகம் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சீரியல் நடிகை சத்யாக்கும் ரசிகர்கள் அதிகம்.

இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிவடைந்தது. இந்த நிலையில் இவர் ஒரு அழகான பிரமாண்டமான திருமண மண்டபம் ஒன்றினை கட்டியுள்ளார். அதற்க்கான பூஜை நடந்த போட்டோஸ்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பலர் அவரை பாராட்டியும் வாழ்த்து கூறியும் வருகிறார்கள்.

pic1

pic2

pic3

pic4

pic5

pic6

pic7

Comments (0)

Login to join the conversation.