sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

அஜித்தின் வீரம் டீசர் அப்லோட் செய்தவர்.. இன்று குட் பேட் அக்லீ வில்லன்.. யார் அந்த வில்லன் நடிகர்…!

Sodukki News · 26 Oct 2024, 07:29 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் தான் அல்டிமிஸ்டார் அஜித் குமார்.இவருக்கு அடுத்ததாக வெளிவர இருக்க கூடிய படம் தான் விடாமுயற்சி.இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைதிரி மூவீ மைக்கேர்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித் இந்த படத்தில் நெகடிவ் கதாபாத்திரம் என தெரிய வந்தது.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். நடிகர் பிரசன்னாவும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு வில்லன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் அஜித்தின் வீரம் படத்தின் டீஸர் அப்லோட் செய்த அர்ஜுன் தாஸ் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதாவது சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்த போது அஜித்தின் மானேஜர் சுரேஷ் சந்திரா டீமில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

அதன் மூலமாக அஜித் சார் உடன் மிகவும் நெருக்கமாகவும் வாய்ப்பு கிடைத்ததாகவும் மேலும் ஷூட்டிங் செட் போவது மார்க்கெட்டிங் செய்வது போன்ற பல வேலைகள் செய்வதாகவும் மேலும் வீரம் படத்தின் டீஸர் அப்லோட் செய்ததாகவும் கூறிஉள்ளார். மேலும் மாஸ்டர் படம் பார்த்து விட்டு அஜித் சார் விரைவில் தாம் இணைந்து பணியாற்றலாம் என்று கூறி இருந்தார் அது தற்போது நிஜம் ஆகி விட்டதாகவும் அஜித் சார் மற்றும் இயக்குனர் ஆதிக் மற்றும் தயாரிப்பாளர் என அனைவருக்கும் தன்னுடைய நன்றி எனவும் கூறி தன்னுடைய பதிவினை மிகவும் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

Comments (0)

Login to join the conversation.