குட் பேட் அக்லி படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் பிரசன்னா.. வெளியான புகைப்படம்..!
Sodukki News · 13 Nov 2024, 06:46 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் தான் அல்டிமிஸ்டார் அஜித் குமார்.இவருக்கு அடுத்ததாக வெளிவர இருக்க கூடிய படம் தான் விடாமுயற்சி.இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைதிரி மூவீ மைக்கேர்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவரின் 63 வது படமாகும்.

இந்நிலையில் அஜித் இந்த படத்தில் நெகடிவ் கதாபாத்திரம் என தெரிய வந்தது. இந்த படத்தின் பஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். நடிகர் பிரசன்னாவும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிங்ல இருந்து நடிகர் பிரசன்னா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் குடுமி வைத்திருப்பது போன்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இது தான் இவருக்கு இந்த படத்தில் உள்ள கெட்டப்பா என பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இந்த போட்டோஸ்ஸை அவரது ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள்.