sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

வசூல் ரீதியாக மாஸ் காட்டி வரும் லக்கி பாஸ்கர்.. வெளியான தகவல்கள்..!

Sodukki News · 13 Nov 2024, 10:17 AM

நடிகர் துல்கர் சல்மான் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். இவருக்கு என்று பெரிதளவில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவர் தமிழில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, ஹே சின்மிகா, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் வெளியான சீதா ராமன் திரைபடம் இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் கடந்த தீபாவளி அன்று நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த படம் தான் லக்கி பாஸ்கர்.  இந்த படம் தமிழில் குறைந்த அளவு தியேட்டர்களில் மட்டுமே ஒளிபரப்பப்பட்டது. மேலும் இந்த படத்தின் கூட போட்டியாக அமரன், பிரதர்ஸ், ப்ளேட்டி பக்கர் போன்ற படங்கள் வெளிவந்தன. பிரதர் மற்றும் ப்ளேடி பக்கர் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில் லக்கி பாஸ்கர் தமிழில் அதிக அளவு தியேட்டர்களில் ஒளிபரப்பப்பட்டது.

 இந்நிலையில் இந்த படம் தற்போது வசூலில் சாதனை படைத்தது வருகிறது. தீபாவளிக்கு வெளிவந்த அமரன் படம் வசூலில் முதல் இடத்தில் இருக்கும் நிலையில் வசூலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது லக்கி பாஸ்கர். தற்போது 88 கோடியை தொட்ட நிலையில் உள்ள இந்த படம் இன்னும் சிறிது நாட்களில் 100 கோடி வசூலை அடைந்து சாதனை படைத்தது விடும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

Comments (0)

Login to join the conversation.