இப்படி ஆடினால் யாருக்குத்தான் பிடிக்காது… திருமண மேடையில் செம ஆட்டம் போட்ட அழகிய இளம்பெண்கள்..
Sodukki News · 06 Jun 2023, 09:14 AM

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.

இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். அதிலும் திருமண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக வீடியோவாகவும் எடுத்து மேரேஜ் வீடியோ கவரேஜில் சேர்த்துவிடுகின்றனர்.

இங்கேயும் அப்படித்தான் மணமேடையில் மணமகனும், மணமகளும் இருக்கிறார்கள்.அப்போது மணமேடையில் ஏறிய அழைய இளம்பெண்கள் செம க்யூட்டாக நடனம் ஆடி பார்வையாளர்களை அசத்தினார்கள். ஒருகட்டத்தில் கல்யாண மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் செம ஆட்டம் போட்டனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.