sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ஷூட்டிங் நிறைவு.. புகைப்படத்தை வெளியிட்ட படக்குழுவினர்..!

Sodukki News · 25 Nov 2024, 05:34 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் தனுஷ். இவர் பல தடைகளை  தகர்த்தெறிந்து விட்டு இவர் சினிமாவில் வெற்றி பாதையில் செல்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் நடனம் ஆடுவது பாடல்களை எழுதி பாடுவது படங்களை இயக்குவது தயாரிப்பது என தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை வளர்த்து கொண்டார். இவருக்கென்று ரசிகர்கள் பட் டாளம் அதிகளவில் உள்ளன.

இவர்  நடிப்பில் கடைசியாக ராயன் படம் வெளிவந்தது. அது அவருடைய 50 வது படமாகும். அதனை அவரே இயக்கினார். இந்த படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த அப்படத்தில் அனிக்கா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியார் மேலும் பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் கதாநாயகனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்ன் கோல்டன்  ஸ்பாரோ பாடல் நல்ல வரவேற்ப்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. மேலும் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவு அடைந்ததாக படக்குழுவினர் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு உறுதி செய்துள்ள்ளனர். மேலும் இந்த படத்தினை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

Comments (0)

Login to join the conversation.