sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் கோல்டன் ஸ்பேரோ பாடல்.. வெளியான தகவல்கள்..!

Sodukki News · 10 Dec 2024, 06:47 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் தனுஷ். இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் நடனம் ஆடுவது பாடல்களை எழுதி பாடுவது படங்களை இயக்குவது தயாரிப்பது என தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை வளர்த்து கொண்டார். இவருக்கென்று ரசிகர்கள் பட் டாளம் அதிகளவில் உள்ளன. இவர்  நடிப்பில் கடைசியாக ராயன் படம் வெளிவந்தது. அது அவருடைய 50 வது படமாகும். அதனை அவரே இயக்கினார்.

இந்த படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்தில் அனிக்கா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியார் மேலும் பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் கதாநாயகனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ கடந்த ஆகஸ்ட் 30 வெளிவந்தது. இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகனும் நடனம் ஆடி உள்ளார். மேலும் இந்த பாடல்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில்  தற்போது  இந்த பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Comments (0)

Login to join the conversation.