sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

8 வருடத்திற்கு பிறகு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த சீரியல் நடிகை… குவியும் வாழ்த்துக்கள்..!

Sodukki News · 02 Nov 2024, 06:35 AM

பல தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர் தான் சீரியல் நடிகை நேஹா ராமகிருஷ்னன். இவர் முதலில் கன்னட மொழியில் தான் சீரியலில் நடித்துள்ளார். அதில் நடித்து பிரபலம் ஆன பிறகு தெலுங்கில் ஒரு சீரியல் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கல்யாண பரிசு மற்றும் ரோஜா சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பாவம் கணேசன் சீரியலில் நடித்தார்.

இந்த சீரியலும் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. . சீரியல் மூலமாக தமிழ் மக்களின் மத்தியில் பெயர் பெற்றவர். மேலும் இவர் சந்தன் என்பவரை காதலித்து வந்தார். இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்தோடு எளிய முறையில் நடந்து முடிந்தது. மேலும் இவர்களது திருமணத்தில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் இவர்கள் திருமணம் ஆகி 8 வருடங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.

திடீரென ஒரு நாள் தான் கர்ப்பமாக இருப்பதாக மகிழ்ச்சியான செய்தியை பதிவிட்டிருந்தார் நேகா. இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் சந்தோசம் அடைந்தார்கள். இந்நிலையில் இவர்களுக்கு அழகான பெண்குழந்தை பிறந்துள்ளதாம். நீண்ட நாட்களுக்கு பிறகு அம்மா மற்றும் அப்பாவான நேஹா மற்றும் சந்தன் ஹௌடவுக்கு அவரது ரசிகர்கள் பாராட்டு மழையையும் பொழிந்து வாழ்த்தையும் கூறிவருகிறார்கள். மேலும் பல பிரபலங்களும் வாழ்த்து கூறிவருகிறார்கள்.

Comments (0)

Login to join the conversation.