sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

நடன மாஸ்டர் பாபா பாஸ்கரை எச்சரிக்கும் தனுஷ்.. குழப்பத்தில் ரசிகர்கள்..

Sodukki News · 06 Nov 2024, 07:26 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் நடனம் ஆடுவது பாடல்களை எழுதி பாடுவது படங்களை இயக்குவது தயாரிப்பது என தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை வளர்த்து கொண்டார். இவருக்கென்று ரசிகர்கள் பட் டாளம் அதிகளவில் உள்ளன. தனுஷ் நடிப்பில் கடைசியாக ராயன் படம் வெளிவந்தது. அது அவருடைய 50 வது படமாகும். அதனை அவரே இயக்கினார். பெரும் எதிர்பார்ப்போடு வெளிவந்த அந்த படம் சொல்லும் அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை அதனை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் குபேர படம் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜூனா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் பட பிடிப்பு இறுதி கட்டத்தை தொடங்கிய நிலையில் இந்த படம் டிசம்பர் மாதம் இறுதியில் வெளிவரும் என்ற தகவல்கள் உத்தேசமாக வெளிவந்துள்ளன. மேலும் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோவம் என்ற படத்தையும் இயக்கி உள்ளார். மேலும் இட்லி கடை என்ற படத்தை இயக்கி அதில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

மேலும் இவர் இயக்கத்தில் உருவாகி வரும் இட்லி கடை படத்தில் தனுஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திருச்சிற்றம்பலம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நித்யா மேனன் நடிக்கிறார். இந்நிலையில் தனுஷின் நடிப்பில் உருவாகி வரும் ஒரு படத்தினுடைய பாடல் ஒன்றிற்கு தனுஷ் மற்றும் பாபா பாஸ்கர் ரிகசல் பார்த்துள்ளனர். அப்போது தணுஷ் நடன மாஸ்டர் பாபா பாஸ்கரை பார்த்து கை அசைத்தபடி எச்சரித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அவர்கள் இருவருக்கும் நடுவில் என்ன நடந்துச்சு என்றும் மேலும் இது எந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடந்தது என்றும் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Comments (0)

Login to join the conversation.