sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

ட்ரெண்டிங் ஆகும் SK23 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Sodukki News · 16 Nov 2024, 05:25 AM

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி அன்று வெளிவந்த  படம் தான் அமரன். இந்த படம் திரைக்கு வந்த நாள் முதல் இன்று வரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்படும் ஒரு படமாக தான் அமைந்துள்ளது. மேலும் இந்த படத்தினை பார்த்து பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்க்கு SK 23 என பெயரிடப்பட்டுள்ளது.

 இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அப்போது எடுத்து கொண்ட போட்டோஸ்கள் வைரல் ஆகி வந்தன. மேலும் இந்த படம் சூர்யா நடிப்பில் வெளிவந்த கஜினி படத்தினை போன்று ஆக்ஷன் மற்றும் காதல் கதைக்களம் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் தன்னை முழுக்க முழுக்க தயார் படுத்தி வருகிறார். தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் ஒரு பாலத்தின் மீது ஏறி நடந்து செல்வது போன்ற காட்சியை ஒருவர் வீடியோ எடுத்துஇணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் ரசிகர்கள் இந்த படத்திற்க்காக எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.

Comments (0)

Login to join the conversation.