sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

சும்மா அசத்தலாக செம நியூஸ் சொன்ன சுந்தரி சீரியல் கதாநாயகி கேப்ரியல்லா.. வாழ்த்தும் ரசிகர்கள்..!

Sodukki News · 18 Nov 2024, 09:02 AM

டிக் டாக் மற்றும் யூடுப்ல் வீடியோ வெளியிட்டு அதன் மூலமாக பிரபலம் ஆனவர் தான் கேப்ரில்லா செல்லல். இவருடைய திறமையால் இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இவர் கருப்பாக இருந்தாலும் அதையெல்லாம் ஒரு பொருட்டாக பொருட் படுத்தாமல் தன்னுடைய திறமையை நம்பி நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் நடிப்பதற்கு வந்தவர். இவர் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஐரா படத்தில் நடித்திருக்கிறார். அதனை தொடர்ந்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கபாலி படத்திலும் நடித்துள்ளார்.

அதன் பிறகு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த காஞ்சனா 3 படத்திலும் நடித்துள்ளார். தன்னுடைய நடிப்பு திறமையை காண்பித்த இவருக்கு சன் டிவியில் சுந்தரி சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய நடிப்பால் சுந்தரி என்ற பெயரில் மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். சுந்தரி  பாகம் ஒன்று வெற்றி பெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பினை பெற்ற நிலையில் சுந்தரி பாகம் இரண்டு ஒளிபரப்பானது. அதுவும் தற்போது மக்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீரியல்க்கு என்று ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

இந்நிலையில் கேப்ரில்லா செல்லல் தன்னுடைய கணவரை பிரிந்து விட்டார் என்ற ஒரு வதந்தியும் வெளிவந்தது அதெற்கெல்லாம் கேப்ரில்லா பதிலடி கொடுக்கும் விதமாக தன் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார்.இந்நிலையில் தற்போது சுந்தரி சீரியல்கதாநாயகி கேப்ரில்லா தான் அம்மாவாக போகிற குட் நியூஸ் போட்டோஸ் மூலமாக தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம்ல் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து  மழையை பொழிந்து வருகிறார்கள்.

Comments (0)

Login to join the conversation.