sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

மூன்றாவது முறையாக சூர்யாவுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை.. வெளிவந்த தகவல்கள்..!

Sodukki News · 20 Nov 2024, 07:30 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவரின் படம் வெளியாக போகிறது என்றாலே இவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது வெளிவந்த  படம் தான் கங்குவா.

இதை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில்  சூர்யா 44 படத்தினை நடித்து வருகிறார். இதில் பூஜா ஹெஹ்டே நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.


ட்ரீம் வாரியார் பிசட்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்க கூடிய படம் சூர்யா 45. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக இவருடன் மூன்று படங்களை நடித்த முன்னணி நடிகையான திரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. திரிஷா மற்றும் சூர்யா ஜோடியை மறுபடியும் திரையில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள். 

Comments (0)

Login to join the conversation.