sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

திருமண வீட்டில் செம க்யூட்டாக ஆட்டம் போட்ட அழகிய இளம் பெண்கள்… என்ன ஒரு அழகான நடனம் பாருங்க..!

Sodukki News · 24 May 2023, 09:37 AM

திருமண வீடுகள் தான் உறவினர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் ஹாட் ஸ்பார்ட். இப்போது கொரோனா பயத்தால் பெரும்பாலும் திருமணங்கள் மிகவும் சிம்பிளாகவே நடந்து வருகிறது. இருந்தாலும் நெருங்கிய உறவினர்களை அழைக்கத் தவறுவதில்லை.

என்னதான் திருமணங்களில் மாப்பிள்ளை, பெண் தான் முக்கியஸ்தர் என்றாலும் சொந்தங்கள் சூழும்போது அது தரும் மகிழ்ச்சியே தனி தான். வசீகரா படத்தில் வரும் மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல பாடல் திருமண நாளில் சொந்தங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசும்.

திருமண வீடுகளில் முன்பெல்லாம் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் டேன்ஸ் கிளப்பாகவும் மாறிவருகின்றது. இதுவும் அப்படியான ஒரு விசயம் தான்!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.

இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். அதிலும் திருமண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக வீடியோவாகவும் எடுத்து மேரேஜ் வீடியோ கவரேஜில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் இந்த மணமக்கள் நடனத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இங்கே தன் உறவுக்காரப் பெண்ணிற்கு திருமணம் வந்ததும் அடுத்தடுத்து கல்யாணத்திற்கு தயாராகி நிற்கும் உறவுக்காரப் பெண்கள் மேடைக்கு வந்தனர். முதல்வன்படத்தில் இடம்பெற்ற உப்புக் கருவாடு பாடலுக்கும்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மின்சாரக் கண்ணா என் மன்னா பாடலுக்கும் செம ஆட்டம் போட்டனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். ரம்பை, மேனகா, ஊர்வசி போல் செம ஆட்டம் போட்டனர் இந்த தேவதைகள்!…

Comments (0)

Login to join the conversation.