sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

உலகநாயகன் என்ற சிறிய கூண்டுக்குள் அடைக்க விரும்பவில்லை.. ரோபோ சங்கர் ட்ரெண்டிங் டாக்..!

Sodukki News · 12 Nov 2024, 09:54 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான கமலஹாசன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் என் மீது பாசமாக இருக்குற அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் இனி வரும் காலங்களில் என்னை யாரும் உலகநாயகன் என்றோ வேறு எதும் பட்ட பெயர்கள் வைத்தோ அழைக்காமல் கமல் என்றோ KH என்றோ அழையுங்கள் என்று கூறியிருந்தார். இது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவலாக இருந்தது.ரொம்ப யோசிச்சு தான் இந்த முடிவிற்கு வந்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

 கமலின் இந்த வேண்டுகோளை குறித்து பலரும் பேசி வந்த நிலையில் நகைசுவை நடிகரான ரோபோ ஷங்கர் அவரை  இனி மேல்  உலகநாயகன் என்று அழைக்க முடியாது அவர் இனிமேல் விண்வெளி நாயகன். உலக நாயகன் என்ற ஒரு சிறு கூண்டுக்குள் அவரை அடைக்க விரும்பவில்லை. விண்வெளி நாயகன் என்பவர் அவர் ஒருவர் மட்டும் தான். வேறு யாரையும் அப்படி குறிப்பிட முடியாது.

 இனி வரும் காலங்களில் அடிக்கப்படும் போஸ்டர்க்களில் உலக நாயகன் என்று குறிப்பிடாமல் விண்வெளி நாயகன் என்றே குறிப்பிடப்படும். அவரை உலகநாயகன் என்ற பதவியில் இருந்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாக மிகவும் உணர்சி பூர்வமாக ரோபோ ஷங்கர் பேசியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் விண்வெளி நாயகன் என்று வைரலாக்கி வருகிறார்கள்.

Comments (0)

Login to join the conversation.