sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

வா வாத்தியார் படத்தில் கெத்தாக குத்தாட்டம் போட்ட கார்த்தி.. வெளியானது டீசர்..!

Sodukki News · 14 Nov 2024, 06:53 AM

தமிழ் சினிமாவில் முன்னனி  நடிகர்கரான கார்த்தி நடித்திருக்கும் படம் மெய்யழகன்.  இவர் முதல் படத்திலேயே தன் வெற்றி இடத்தை பிடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் மெய்யழகன். அந்த படத்திற்கு பிறகு இவர் நடித்த படம் வா வாத்தியார். இந்த படத்தினை நலன் குமாரசாமி இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் கீர்த்தி செட்டி நடித்துள்ளார்.

இந்த படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் வெகு நாட்களாக நடந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நேத்து மாலையில் வெளிவந்துள்ளது. இதில் கார்த்தி போலீஸ் கெட்டப்பில் இறங்குகிறார் அவரை வரவேற்பதற்க்காக ஒரு கூட்டம் காவல் நிக்கிறது மேள தாளத்துடன் கார்த்தியும் அவர்களுடன் சேர்த்து கெத்தாக நடனம் ஆடுகிறார்.

மேலும் டீசரில் பல இடங்களில் பழைய நடிகர்களான எம்.ஜி.ஆர் மற்றும் நம்பியாரை குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது. மேலும் வா வாத்தியார் படத்தினை மிகவும் எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்து இருந்த வேளையில் அது ஒரு கொண்டாட்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வா வாத்தியார் டீசெர் கொண்டாட்டத்தில் கார்த்தி ரசிகர்கள்.

Comments (0)

Login to join the conversation.