விடுதலை 2 இசை வெளியீட்டு விழா.. கடுப்பான இயக்குனர் வெற்றிமாறன்.. இதுதான் காரணமா..!
Sodukki News · 27 Nov 2024, 07:05 AM

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியார், இளவரசு, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள படம் தான் விடுதலை 2. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றநிலையில் தற்போது பாகம் 2 உருவாகி உள்ளது. இதற்க்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்தார். மேலும் இந்த படம் டிசம்பர் 20 ம் தேதி வெளிவர உள்ள நிலையில் இதனுடைய இசை வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் விஜய் சேதுபதி, இளையராஜா என படத்தில் உள்ள அணைத்து பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த இசை வெளியிட்டு விழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன். தன்னுடைய படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி என்று கூறினார். மேலும் இளையராஜாவுடன் பயணித்த அனுபவம் குறித்து பேசியிருந்தார்.

படக்குழுவினரையும் புகழ்ந்து வெற்றிமாறன் பேசிக்கொண்டிருந்த பொது அங்கு வந்த ஒரு நபர் வெற்றிமாறனிடம் அனைவரின் பெயரையும் சொல்ல வேண்டும் என்று சொல்ல. "டீம் நா எல்லாரும் தான்டா" நன்றி என கோபத்தில் தன்னுடைய பேச்சை பாதியில் நிறுத்தி விட்டு அமர்ந்தார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.