இந்த சின்ன வயசுலையே அடித்து தூள் கிளப்பிய சிறுவன்… ஆச்சர்யத்தில் மெய் மறந்து ரசித்த ஆசிரியர்கள்..

குழந்தைகளுக்கு இருக்கும் திறமைகளை சிறுவயதில் இருந்தே ஊக்குவிப்பதால் பின்னாட்களில் அவர்களின் திறமையின் மூலம் பெயரையும், புகழையும் நாட்டிற்கு பெற்று தருவது திண்ணம். சோழர்கள்கள் மற்றும் பாண்டியர்கள் ஆட்சியின் போது பறை முக்கிய பங்காற்றியது. அரசரிடம் இருந்து வரும் தகவல்களை மக்களுக்கு தெரிவிப்பதற்கும், மக்கள் அனைவரையும் ஓரிடத்தில் ஓன்று சேர்ப்பதற்கும், அரசர் போர்க்களத்தில் வெற்றி பெற்றதை தெரிவிப்பதற்கும், வெள்ளம் போன்ற இயறக்கை பேரிடரின் போது மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவும், திருவிழா காலங்களிலும்,மங்கள நிகழ்ச்சிகளிலும் தலையாய இசை கருவியாக பறை சிறந்து விளங்கியது.

தற்போது அரசியல், ஆர்ப்பாட்டம், ஊர்வலங்கள் போன்ற நிகழ்ச்சிகளிலும், கோவில் திருவிழாக்களிலும், மங்கள நிகழ்ச்சிகளிலும், இறுதி ஊர்வலங்களிலும் பறை இசைக்கப்படுகிறது. சினிமாவில் பாறையால் உருவாக்கப்பட்ட பாடல்கள் பட்டி…தொட்டி எங்கும் மக்களால் விரும்பி கேட்கப்படும். மக்களோடு அதிக தொடர்பு உள்ளதால் பாறையின் இசை தனித்துவத்தோடு விளங்குகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள்

பறையால் இசை அமைத்து குழுவாக சேர்ந்து நடனம் ஆடுவார்கள். பெண்கள் கோவில் விழாக்களில் வட்டமாக சுற்றி நின்று கும்மியடித்து நடனம் ஆடுவார்கள் அப்போது பறையும் இசைக்கப்படும். இங்கே ஒரு சிறுவன் தன்னையும் மறந்து கலையில் ஈடுபாட்டுடன் மிக அழகாக பறை இசைத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். தமிழர்களின் பாரம்பரியமான கலையை வகுப்பறையில் ஆசிரியர்கள் முன்னிலையில் பறை இசைத்து பட்டை கிளப்பி உள்ளார். அந்த காட்சிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது….

You may have missed