இசைப்புயல், ஆஸ்கார் நாயகன், கிராமி அவார்ட், பத்ம பூஷன் போன்ற பல விருதுகளுக்கு சொந்தக்காரர் என்று கொண்டாடப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்…… பாடல்களுக்கு நம் இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெரும் புகழை உலக அளவில் பெற்று தந்தவர் இசைப்புயல். இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு அவர் விளம்பர படங்களுக்கும், ஆவணபடங்களுக்கும் இசையமைத்து பரிசுகள் பெற்றுள்ளார்.இவருடைய தந்தை புகழ் பெற்ற இசை அமைப்பாளர் R.K.சேகர். A.R.ரஹ்மான் நான்கு வயது ஆன போதே கி-போர்ட் வாசிக்க ஆரம்பித்துள்ளார். அப்போதே அவரது தந்தையின் நண்பர்கள் வரும்காலத்தில் பெரிய இசை அமைப்பாளராக வருவார் என்று கருத்துதெரிவித்த போது அவரது தந்தை புன் முறுவல் புரிந்துள்ளார்.
எதிர்பாராத விதமாக அவரது தந்தை இறந்தபிறகு அவரது குடும்பம் கடும் சிரமத்தை சந்தித்தபோதும் அவரது தயார் இசையின் மேல் உள்ள விருப்பதாலும், அவரது தந்தை செய்து வந்த தொழில் என்பதாலும் தனது மகனை இசையின் மூலம் வருமானம் ஈட்டும் படி கேட்டுக்கொண்டுள்ளார். அதன்பிறகு அவரது வாழ்வே இசைமயமாகி உள்ளது. தனது பதினோராவது வயதில் இசையமைப்பாளர் மாஸ்டர் தன்ராஜ் அவர்களின் குழுவில் இணைந்து தனது முதல் அடியை எடுத்துவைத்துள்ளார். தந்தையின் நண்பரான அர்ஜுன் மலையாள இசை அமைப்பாளர் குழுவிலும் பணிபுரிந்துள்ளார். சவால்களுக்கு மத்தியில் இசை துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சிகள் முதலிய நுணுக்கமான அறிவை கற்றுக்கொண்டே இருந்திருக்கிறார். இசைக்கு எல்லைகளே இல்லை, நாடுவிட்டு நாடு தாண்டி நம் அண்டை நாட்டினரான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் இசைப்புயலின் ரசிகர்கள் என்பதை நம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்துள்ளார்கள். இசையை அமைக்க முற்படும் போது அமைதியான சூழலில் புதிய சிந்தனைகள் உற்பத்தி ஆகும் என்றும் தெரிவித்துள்ளார். ஆழ்கடல் அமைதியுடன் இருப்பது போலவே அமைதியான சூழலில் நல்ல சிந்தனைகள் பிறக்கும்.
டைம் நிறுவனத்தின் உலகின் மிகவும் பிரபலமான சிறந்த 100 மனிதர்களில் இசைப்புயலும் ஒருவர் ஆவார். ஆரம்ப காலகட்டத்தில் பஞ்சதன் என்ற பெயரில் ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கினார். லியோ காப்பி என்ற விளம்பரத்திற்கு இசை அமைத்தற்கு சிறந்த விளம்பர ஜிங்கிள் பரிசு அவருக்கு கிடைத்தது. அதன் பிறகு 1992-ம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா என்ற படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானார். இந்த படத்திற்கு அவருக்கு சிறந்த இசை அமைப்பாளர் என்ற தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு அவருடைய படைப்புகள் அனைத்தும் இந்திய முழுக்க மற்றும் இன்றி உலக அளவில் சிறந்த படங்களுக்கும், சிறந்த இசைக்கும் கொடுக்கப்படும் உயரிய விருதான ஆஸ்கார் விருது 2008-ம் ஆண்டில் வெளிவந்த ஹிந்தி படமான ஸ்லாம் டாக் மில்லியனர் என்ற படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.
2கே-கிட்ஸ் கொண்டாடும் பொன்னியின் செல்வன் படத்தை மட்டுமே அல்ல படத்தின் பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொன்னி நதி பார்க்கணுமே…. என்ற பாடல் அனைத்து வயதினரையும் கவர்ந்துள்ளது.
இசையில் ஆர்வமும், திறமையும் உள்ளவர்களை இசைப்புயல் ஆதரித்து வருவதோடு, பாராட்டியும் அவர்களுக்கான அங்கீகாரத்தையும் வழங்கி வருகிறார். சமீபத்தில் அவரின் முதல் படைப்பான ரோஜா படத்தில் இடம் பெற்ற காதல் ரோஜாவே……என்ற பாடலை கி-போர்ட்டில் வாசித்த 3-வயது குழந்தையை பாராட்டி அதனை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிஸின்கள் இந்த வயதில் இப்படி ஒரு அபார திறமையா என பாராட்டி வருகிறார்கள்