ஐந்து ஆண்டுகளாக கோமாவில் படுத்த படுக்கையாக இருந்த கணவர் திடீரென ஒருநாள் கண் விழித்ததும் மனைவியிடம் சொன்ன தகவல் உணர்ச்சி வசப்பட வைத்துள்ளது.
சீன நாட்டின் ஹூபே பிராந்தியத்தை சேர்ந்தவர் லீ ஷிலியா. கடந்த 2013ம் ஆண்டில் ஒரு விபத்தில் சிக்கினார் லீ. இதில் தலையின் பின் பகுதியில் மூளையில் பலத்தகாயம் ஏற்பட்டது. இதில் கோமாவில் சிக்கினார் லீ.
முதலில் சிலகாலம் லீ, மருத்துவமனையில் தங்கி சிகிட்சை பெற்று வந்தார். ஆனால் கோமா நிலை தொடர்ந்த நிலையில் மருத்துவர்கள் அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல சொல்லியிருக்கிறார்கள். மேலும் அவர் 50 வயதைக் கடந்தவர் என்பதால் இனி கோமா நிலையில் இருந்து மீள வாய்ப்பில்லை எனவும், எஞ்சிய காலத்தில் அவரை நன்றாக பார்த்து கொள்ளும்படியும் மருத்துவர்கள் அவரது மனைவியிடம் சொன்னார்கள்.
மருத்துவர்களே கைவிட்ட நிலையிலும் லீயின் மனைவி மனம் தளரவில்லை. நாளின் 24 மணிநேரத்தில் இருபது மணிநேரம் அவர் அருகிலேயே இருந்து கணிவோடு பார்த்து வந்தார்.
லீயின் தலைமாட்டிலேயே இருந்த அவர் மனைவி ஷிலாங், லீக்கு பிடித்தமான பாடல்களை ஒலிபரப்பி வந்தார். ஐந்து ஆண்டுகள் அப்படியே நகர்ந்த நிலையில் திடீரென ஒருநாள் கண் விழித்த லீ, நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன் என சொல்லியிருக்கிறார். மருத்துவர்களே லீ கண் விழித்ததை ஆச்சர்யத்தில் ஆழ்ந்து இருக்கின்றனர்.
அன்பை விட மிகச்சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை என்பதற்கு இந்த சம்பவம் நிகழ்கால உதாரணம் ஆகியிருக்கிறது. லீ தொடர்ந்து 5 ஆண்டுகள் படுக்கையில் இருந்ததால் போதிய ஊட்டச்சத்து உணவு சாப்பிடாததால் பத்துகிலோ எடை குறைந்து இருந்தார். இதனால் அவர் உடல் எடையை அதிகரித்து ஆரோக்கியத்தை கூட்ட மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்…