தமிழ் சினிமாவில் 80’s காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் அர்ஜுன். அன்று முதல் இன்று வரை அவருடைய சினிமா பயணம் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இவருடைய படங்களில் இவர் மிகவும் உணர்சி பூர்வமாக நடித்திருப்பார். மேலும் இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இவர் இன்று வரை பெரிதளவில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவருடைய படம் என்றாலே அந்த படத்தில் ஆக்க்ஷன்க்கு பஞ்சம் இருக்காது.
மேலும் அவர் இன்றய காலகட்டத்தில் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துவருகிறார். மேலும் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும் இவர் இந்த கதாபாத்திரத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். மேலும் இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.
ஐஸ்வர்யாக்கு சிலமாதங்களுக்கு முன்பாகத்தான் திருமணம் நடைப்பெற்றது. இவருடைய திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் ஐஸ்வர்யா ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அர்ஜுனினி இரண்டாவது மகள் அஞ்சனா தன்னுடைய குடும்பத்துடன் சிறு வயதில் எடுத்து கொண்ட போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.