தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் வலம் வந்தவர் தான் நடிகர் ஜெயராம். இவருடைய மகன் தான் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான காளிதாஸ் ஜெயராம். நடிகர் காளிதாஸ் தாரணி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார். இந்நிலையில் அவர்களின் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துகொண்டிருக்கிறது. மேலும் இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த 2023 ல் தான் நடந்து முடிந்தது.
மேலும் இவர்களின் திருமண ஏற்பாடுகளில் இவர்களுக்கு எங்கு வைத்து திருமணம் நடக்க போகிறது எனவும் எந்த தேதியில் திருமணம் நடக்க போகிறது எனவும் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. மேலும் இவர்களின் திருமண ஏற்பாடுகளில் ஒன்றான பத்திரிக்கை வைப்பதை முதலில் தொடங்கி உள்ளனர். முதல் பத்திரிக்கை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வைக்கப்பட்டது. அதற்க்கான போட்டோஸ்களை நடிகர் காளிதாஸ் ஜெயராம் தன்னுடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இவருடைய வருங்கால மனைவியான தாரணி என்பவர் கடந்த 2019 ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டத்தையும் கடந்த 2021 ம் ஆண்டில் மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா போட்டிகளிலும் பங்கேற்று உள்ளார். மேலும் இவர் விளம்பர படங்களில் நடிகை தீபிகா படுகோனுடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.