Site icon

உலக நாயகன் கமலின் புது அவதார கெட்டப்…அமெரிக்காவில் எடுத்துக்கொண்ட போட்டோஸ்…வைரல்…

உலக அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் தான் உலக நாயகன் கமல். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான இவர். தற்போது மணிரத்தினம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் கமலகாசன், சிம்பு, திரிஷா, கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லக்ஷ்மி என பல பிரபலங்கள் நடித்துள்ளன. ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தினை கமலஹாசன், மணிரத்தினம், உதயநிதி ஸ்டாலின் ஆகிய மூவரும் சேர்ந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் பல இடங்களில் எடுக்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை நோக்கி வந்து விட்டது. இந்நிலையில் கமலஹாசன் ஏ ஐ தொழில் நுட்பம் பற்றி படிப்பதற்காக மூன்று மாத காலம் அமெரிக்கா சென்று உள்ளதாக தகவல் ஓன்று வெளியானது.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து கமலஹாசன் தன்னுடைய புது கெட்டப் போட்டோவை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவரது ரசிகர்கள் தற்போது அந்த போட்டோஸ்களை ஷேர் செய்தும் லைக்குகளை குவித்தும் வருகிறார்கள்.

Exit mobile version