தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டவர் தான் நடிகர் சத்யராஜ். இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவர் ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் குணசித்திர கதா பாத்திரமாகவும் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் இவர் பாகுபலி படத்தின் மூலம் 2K கிட்ஸ்க்கு ஒரு கட்டப்பாவாக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் இன்றளவும் தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பினை சின்ன சின்ன கதாபாத்திரத்தில் வெளிக்கொண்டு வந்து இருக்கிறார்.
இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரின் மகள் திவ்யா மகிழ்மதி ஊட்டச்சத்து நிபுணரான இயக்கம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் திவ்யா ஒரு பதிவினை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது தன்னுடைய அம்மா நான்கு வருடங்களாக கோமாவில் இருப்பதாகவும் மேலும் அவர் வீட்டில் தான் இருக்கிறார் எனவும் அவருக்கு உணவு டியுப் வழியாக தான் கொடுப்பதாகவும் அவரின் இந்த நிலைமையை பார்த்து நாங்கள் அனைவருக்கும் மிகவும் உடைந்து விட்டோம் எனவும் மேலும் அவர் சரியாகி வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது எனவும் கூறி உள்ளார்.
மேலும் அவர் அம்மா கிடைப்பார் என எங்களுக்கு தெரியும் எனவும் கூறியுள்ளார். மேலும் எங்களுடைய அப்பா கடந்த 4 வருடங்களா single parent ஆக தான் இருக்கிறார் எனவும் மேலும் சில வருடங்களுக்கு முன்பு அவரின் பாட்டி அதாவது சத்யராஜின் அம்மா இறந்து விட்டார்கள் எனவும் என்னுடைய அப்பாக்கு நான் ஒரு சிங்கள் அம்மாவாக இருக்கிறேன் எனவும் மேலும் நானும் என்னுடைய அப்பாவும் Powerful Single moms Club ல் இருக்கிறோம் எனவும் தன்னுடைய தந்தையை பற்றி நெகிழ்ச்சியாகவும் தாயை பற்றி எமோஷனல் ஆகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.