Site icon

அமிர்த ரத்னா விருது வாங்கிய நடிகர் தனுஷ்.. விருது வழங்கியது யார் தெரியுமா.. வாழ்த்தும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் தனுஷ். இவர் பல போராட்டத்திற்கு பிறகு  தற்போது சினிமாவில் வெற்றி பாதையில் செல்கிறார். இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் நடனம் ஆடுவது பாடல்களை எழுதி பாடுவது படங்களை இயக்குவது தயாரிப்பது என தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை வளர்த்து கொண்டார். இவருக்கென்று ரசிகர்கள் பட் டாளம் அதிகளவில் உள்ளன. தனுஷ் நடிப்பில் கடைசியாக ராயன் படம் வெளிவந்தது.  அதனை அவரே இயக்கினார்.

தனுஷ் தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோவம் என்ற படத்தையும் இயக்கி உள்ளார். மேலும் இவர் நடிப்பில் குபேரா படம் விரைவில் வெளிவர உள்ளது. மேலும் இவர் இட்லி கடை படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நியூஸ் 18 சார்பில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்படும். அந்த வகையில் தற்போது

அமிர்த ரத்னா விருது தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ்க்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டது. இதனை முன்னாள் தடகள வீராங்கனை மற்றும் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் பி.டி.உஷா வழங்கினார். இதை பற்றி பேசிய தனுஷ் அமிர்த ரத்னா விருது  தந்ததற்கு நியூஸ் 18 மற்றும் பி.டி.உஷாக்கு நன்றி என கூறியுள்ளார். மேலும் இந்த விருது இவரை மேலும் உழைக்க தூண்டும் என கூறியுள்ளார். இந்த விருது பெற்றதற்கு தனுஷை திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள்.

Exit mobile version