Site icon

இளையதளபதி விஜயின் லியோ படத்திற்க்கான மேக்கிங் வீடியோ வெளியானது…!மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவில் முன்னணி ரசிகர்கள் பட்டியலில் இருப்பவர் தான் இளைய தளபதி விஜய். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்த கோட் படம் தற்போது வெளிவந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் வசூலிலும் சாதனை படைத்தது. தளபதியின் படம் என்றாலே வசூலுக்கு பஞ்சம் இருக்காது. இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் தளபதி 69.

மேலும் இளையதளபதி விஜய் சமீபத்தில் அரசியல் பயணம் மேற்கொள்ளலாம் என நினைத்து தமிழக வெற்றி கழகம் ஒன்றை உருவாக்கி உள்ளார். மேலும் இவர் அரசியலுக்காக சினிமாவில் இருந்து விலக போவதாகவும் கூறியுள்ளார். மேலும் சினிமாவில் ஒப்பந்தம் ஆகி இருக்கும் படங்களை மட்டும் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.மேலும் இவர் நடிக்கும் கடைசி படம் இளைய தளபதி 69 ஆக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சினிமாவில் இருந்து விலக போறது அவருடைய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி.

இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் இயக்குனர் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த வெற்றி படம் லியோ. அந்த படமும் மக்கள் ,மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில் தற்போது அந்த படத்திற்க்கான மேக்கிங் வீடியோ ஒன்றினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பினை பெற்றுள்ளது. மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள் ஆரவாரத்தில் உள்ளனர்.

Exit mobile version