Site icon

தளபதியின் சிறு வயது தங்கையை பார்த்துள்ளீர்களா… பலரும் பார்த்திராத சிறுவயது புகைப்படங்கள்..!

இளையதளபதி விஜய் உலகம் முழுக்க தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். இவரின் ரசிகர்கள் படம் வெளியாகும் அன்று திருவிழா போல் கொண்டாடி மகிழ்வார்கள். தென்னிந்தியாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழும் நடிகர் விஜய் சிறு வயது முதலே நடித்து வருகிறார். பத்து வயதானபோது 1984-ம் ஆண்டு வெளிவந்த வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்டார்.

பள்ளி படிப்பை முடித்த பிறகு லயோலா கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்த போது கதாநாயகனாக நடிக்கும் ஆர்வம் இருந்ததால் அவரது தந்தை படத்தில் நாளைய தீர்ப்பு என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார். அதன் பிறகு ஒரு சில படங்களில் கதநாயகனாக நடித்திருந்தாலும், இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பூவே உன்னக்காக படம் இவரை ஒரு ஹீரோவாக மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தது.

லவ் டுடேய், நேருக்கு நேர்,காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்கள் இவரை ஒரு காதல் நாயகனாக மக்கள் அங்கீகரித்தனர். இவ்வாறு படிப்படியாக பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்தார் நடிகர் விஜய்.குஷி மற்றும் ப்ரியமுடன் போன்ற படங்கள் இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் படங்களாக இருக்கின்றன. தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் தனெக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளார்.தற்போது வாரிசு படம் பொங்கல் அன்று திரைக்கு வருவதற்கு தயராகி வருகிறது. தனது நடிப்பின் மூலம் தமிழ் நாடு மட்டும் இன்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இளையதளபதி விஜய் அவர்களுக்கு திவ்யா என்ற ஒரு தங்கை உண்டு. இரண்டு வயதான போது உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அவர் இறைவன் அடி சேர்ந்தார். இவரது தந்தை எஸ்.வி. சந்திரசேகர் அவர்கள் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த போது தனது மகள் அனைவரிடத்தும் அதிக அன்பும், அக்கறையும் கொண்ட குழந்தை என்றும், துன்பப்படும் உறவுகளுக்காக தினமும் இறைவனிடத்தில் வேண்டுவார் என்றும் கூறியிருக்கிறார்.தற்போது விஜய் அவர்களின் சிறு வயது புகைப்படத்தில் தனது அம்மா சோபா சந்திர சேகர், தந்தை எஸ்.வி.சந்திர சேகர் மற்றும் உடன் பிறப்பு திவ்யா உடன் எடுத்து கொண்ட சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தளபதி அவர்களின் குடும்ப புகை படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

pic1

pic2

pic3

Exit mobile version