Site icon

கேன்சர் நேரத்தில் அனுபவித்த வலிகளை உணர்வு பூர்வமாக பகிர்ந்த நடிகை கௌதமி.. வேதனையில் ரசிகர்கள்..!

80’ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கௌதமி. இவர் குரு சிஷியன் என்ற தமிழ் படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர். இவர் நடித்த முதல் படமே இவருக்கு வெற்றி படம் தான். அதனை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் அதிகம். ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த நடிக்கையில் இவரும் ஒருவர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் அரசியலிலும் தன்னுடைய பங்கினை வெளிப்படுத்தினர். மேலும் இவர் தற்போது சீரியல்களிலும் வர ஆரம்பித்து விட்டார். இவ்வாறெல்லாம் புகழ் பெற்ற நடிகை அண்மையில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர்  அனுபவித்த வலிகளை ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அந்த வாழ்க்கை மிகவும் மோசமானது. என் மக்களுக்காக புற்றுநோயை எதிர்த்து போராடினேன்.

 என்   மனதில் அப்போது ஓடியது எல்லாம் என் மகளை பற்றி மட்டும் தான். என் மகளுக்கு நான் மட்டும் தான் இருக்கிறேன். மேலும் நான் இதில் இருந்து மீண்டு வரலாம், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் அவருக்கு சொல்லி கொடுத்தேன். அப்போது என் மகள் அனுபவித்த வலி சொல்ல முடியாதவை என்று புற்றுநோயால் அவர் அனுபவித்த வலிகள் குறித்து பகிர்ந்துள்ளார் நடிகை கௌதமி. 

Exit mobile version