விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலம் ஆனவர் தான் நந்தினி. இவருக்கு என்று அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில் இருந்து தான் இவரை எல்லாரும் செல்லமாக மைனா என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இந்த தொடரை தொடர்ந்து வெள்ளித்திரையில் இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் வம்சம் படத்தில் காமெடி வேடத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்தார்.
அதனை தொடர்ந்து நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார். இப்படி தன்னுடைய நகைசுவை திறமையால் அசத்தும் இவர் பிக் பாஸ் சீசன் 6 ல் கலந்து கொண்டார். அதன் பிறகு இன்னும் எந்த ஒரு சின்னத்திரை தொடரிலும் வரவில்லை. இவர் தற்போது மைனா லிங்க்ஸ் என்ற யூடுபே சேனல்லை வைத்துள்ளார். இதில் மொத்தம் 16 லட்சத்துக்கு மேலாக சப்கிறிபேர்ஸ் உள்ளனர். இவர் இன்னொரு சேனல்ம் தொடங்கி அதில் குறும்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் புள்ளத்தாச்சி என்ற வெப் தொடரையும் நடித்து வெளியிட்டு வருகிறார். தற்போது வெப் தொடருக்காக இலங்கைக்கு சென்று படம் எடுத்துள்ளனர். இவர்கள் இந்தியா வந்த பொது படமாக்கிய 800 ஜிபி அளவு புட்டேஜ் ஹார்ட் டிஸ்க் கீழே விழுந்ததில் ஒர்க் ஆகவில்லை. உழைப்பு மற்றும் பணம் எல்லாம் வீணாக போனது என்று வருத்தத்தில் மைனா நந்தினி மற்றும் அவரது கணவர் யோகேஸ்வரன் பதிவிட்டுள்ளனர். இவர்களின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.