Site icon

இந்த சிறுமி யார் என தெரிகிறதா..? 80ஸ், 90ஸ் காலங்களில் கொடி கட்டி பறந்த டாப் நடிகை தான்..!

தமிழ்த்திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பலரும் பின்னாட்களில் ஹீரோயினாக ஜொலித்திருக்கிறார்கள். சின்னத்திரையில் இன்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நீலிமா, தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான். அதேபோல் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினி அங்கிள் என ரஜினியை வாய் ததும்ப அன்போடு அங்கிள் என அழைத்த மீனா…வளர்ந்து அதே ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.

நடிகை மீனாவின் மகள் ‘நைனிகா’ இளையதளபதி விஜய் நடித்த தெறி திரைப்படத்தில் விஜயின் மகளாக நடித்து இருந்தார். அந்தப்படம் அவருக்கு மிகவும் நல்லப்பெயரை வாங்கிக் கொடுத்தது. தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நைனிகா, இப்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போய் இருக்கிறார். அதைப்பார்ப்பவர்கள் ‘நைனிகாவா இது?’ என கமெண்ட் செய்து வருகிறார்கள். அந்த அளவுக்கு அவர் விறு, விறுவென வளர்ந்து வருகிறார்.

மீனாவுக்கும் இது திரையுலகில் இரண்டாவது இன்னிங்ஸ் எனச் சொல்லலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து அண்ணாத்த படத்திலும் நடித்தார். இந்நிலையில் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக இருந்த போது திரைப்படக் கம்பெனிகளுக்கு கொடுப்பதற்காக எடுத்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அதில் அச்சு, அசலாக அவரது மகள் நைனிகா போலவே இருக்கிறார் மீனா. இந்தப்படம் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.புகைப்பட இணைப்பு கீழே..

pic1

pic2

pic3

Exit mobile version