தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் நயனும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் பெரும் விமர்சையாக நடந்தது. மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நயனுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் உயிர் மற்றும் உலக் என 2 மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில அவங்களோட திருமண வாழ்க்கையை பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Nayanthara Beyond the fairy tale இந்த ஆவணப்படம் இரண்டு வருடங்கள் கழித்து தற்போது தான் நெட்ப்ளிக்ஸில் வெளியாகி உள்ளது.
இந்த ஆவண படம் வெளியாக இரண்டு ஆண்டுகள் தாமதமாக நடிகர் தனுஷ் தான் காரணம் என நயன்தாரா குற்றம் சாட்டியிருந்தார். அதாவது இந்த ஆவண படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த கேட்டபோது இந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் ஒத்துவரவில்லை எனவும் மேலும் இதற்க்கு ரூ. 10 கோடி கேட்ட்தாகவும் நயன்தாரா குற்றம் சாட்டினார். அனால் தனுஷ் தரப்பில் இருந்து எந்த வித பதிலும் வரவில்லை.
இந்நிலையில் தற்போது இந்த ஆவண படம் வெளியான நிலையில் நயன்தாரா அவருடைய இறந்த கால வாழ்க்கையை பற்றியெல்லாம் அதில் பேசியுள்ளார். அப்போது அதில் இடையில் நான் சினிமாவில் இருந்து கொஞ்ச காலம் விலகி இருந்தது அது என்னோட முடிவு அல்ல என் முன்னாள் காதலரின் முடிவு. நிபந்தனை என்ற கட்டாயத்தில் தள்ளப்பட்டேன் எனவும் மேலும் அதற்க்கான காரணம் கூட தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.