தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. நயனும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் பெரும் விமர்சையாக நடந்தது. இந்த நிலையில அவங்களோட திருமண வாழ்க்கையை பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Nayanthara Beyond the fairy tale இந்த ஆவணப்படம் இரண்டு வருடங்கள் கழித்து தான் நெட்ப்ளிக்ஸில் வெளியாகி இருந்தது.இந்த ஆவண படம் வெளியாக இரண்டு ஆண்டுகள் தாமதமாக நடிகர் தனுஷ் தான் காரணம் என நயன்தாரா குற்றம் சாட்டியிருந்தார்.
அதாவது இந்த ஆவண படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த கேட்டபோது இந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் ஒத்துவரவில்லை எனவும் மேலும் இதற்க்கு ரூ. 10 கோடி கேட்ட்தாகவும் நயன்தாரா குற்றம் சாட்டினார். ஆவணப்பட ப்ரோமொஷன்காக தான் நயன்தாரா இவ்வாறு எல்லாம் செய்கிறார் என பலர் கூறிவந்தனர். இந்நிலையில் ஒரு பேட்டியில் இந்த சர்ச்சை குறித்து நயன்தாரா பேசியுள்ளார். அதாவது தவறு செய்யாமல் நான் ஏன் பயப்படணும். ஒருவரது இமேஜை கெடுப்பது எனது நோக்கம் அல்ல. அவரது நண்பர்கள் மற்றும் மனேஜர் மூலமாக பல முறை அவர்களை அணுகினோம் ஆனால் முடியவில்லை.
விக்னேஷ் சிவன் எழுதிய நான்கு வரிகள் தான் கேட்டோம் அது எங்களுடைய வாழ்க்கையை பிரதிபலிக்கும் என நம்பினோம் தனுஷ் உடனே தருவார் என நினைத்தோம் அவர் எனது நல்ல நண்பர் ஆனால் தற்போது அப்படி இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தனுஷிடம் போனில் பேசுவதற்கு பல முறை முயற்சித்தேன் ஆனால் முடியவில்லை. மேலும் ட்ரைலரில் இருந்த ஷூட்டிங் ஸ்பாட் காட்சி எங்களது மொபைலில் எடுக்கப்பட்டது. அது படத்தில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல. தனுஷ் பெரிய நடிகர் அவர் மீது மரியாதை உள்ளது. ஆனால் அவர் இந்த வீசியதில் செய்தது அநியாயம் என நயன்தாரா பேசியுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.