டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் விஜய் தொலைகாட்சியில் அதிக ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி “குத் விக் கோமாளி”. இந்த நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். மேலும் பலர் பிரபலம் ஆகுவதற்க்காக வெளிநாடுகள் என பல இடங்களுக்கு சென்று போட்டோஷூட் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு பெரிதளவில் பேமஸ் ஆவார்கள். அனால் மொட்டை மாடியில் போட்டோஷூட் நடத்தி ஒரே இரவில் பேமஸ் ஆனவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.
மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் புகழ் பெற்றார். இந்நிலையில் இவருக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதனை உறுதி செய்யும் விதமாக ரம்யா பாண்டியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது அவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த யோகா ஆசிரியர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவருடைய பெயர் லெவல் தவான் என்றும் கூறியுள்ளார். மேலும் இருவரும் யோகா வகுப்ப்பிற்கு சென்ற போது இருவருக்கும் இடையில் புரிதல் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இவர்களின் திருமணம் ரிஷிகேசியில் உள்ள ஷிவ்புரியில் கங்கை நதி கரையில் இன்று இவர்களின் திருமணம் விமர்சையாக நடந்துள்ளது.மேலும் இதில் இவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துள்ளனர்.மேலும் இவர்களின் திருமண வரவேற்பு சென்னையில் வைத்து நடைபெறும் என்ற தகவலும் பரவியுள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த திருமண ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.