தெலுங்கில் வெளிவந்த கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலமாக பிரபலம் ஆனவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த படம் தமிழும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த வாரிசு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த படம் தான் புஷ்பா.
இந்த படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகம் வெற்றி அடைந்த நிலையில் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5 ம் தேதி புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்து கொண்டுவருகிறது.
இந்நிலையில் தற்போது ராஷ்மிகா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புஷ்பா ஸ்ரீ வள்ளி என்று எழுதப்பட்ட புடைவையை அணிந்து கலக்கலான ஸ்டில்களில் போஸ் கொடுத்து அதனை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் ரசிகர்கள் அதற்க்கு லைக்குகளை குவித்தும் வருகிறார்கள்.
pic1
pic2