Site icon

நடிகை சாய் தன்ஷிகா மீது சர்ச்சையான புகார் அளித்த பிரியா.. சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் எச்சரித்த தன்ஷிகா..!

தமிழ் சினிமாவில்  தமிழ் படம் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை சாய் தன்ஷிகா. மேலும் இவர் அதனை தொடர்ந்து பேராண்மை, கபாலி போன்ற படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் நடிகர் ரஜினியின் மகளாக நடித்திருப்பார். இந்த படத்தின் மகள் கேரக்டர் இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று கொடுத்தது. இந்த படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய குறுகிய கால நடிப்பிலே அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்தவர்.

இந்நிலையில் இவர் மீது இவரது முன்னாள் மனேஜர் பிரியா ஒரு குற்றச்சாட்டினை வைத்துள்ளார். அதாவது பணம் மற்றும் சொத்து உள்ளவர்களை குறி வைத்து மிரட்டுவதாகவும் மேலும் அவருடைய பெற்றோரை தன்ஷிகா மிரட்டுவதாகவும் அதனால் தன்ஷிகாவை கைது செய்ய வேண்டும் என்று  நடிகை சாய் தன்ஷிகா மீது தொடர்ந்து ட்விட்டர் மூலமாக புகார் அளித்து வருகிறார்பிரியா.

இந்த புகாருக்கு பதிலளித்த தன்ஷிகா, 2019 ஆம் ஆண்டிலேயே பிரியாவை மேனேஜராக இருந்து நீக்கியதாகவும், பிரியா குறிப்பிட்ட நபர்கள் யாரென்று கூட தனக்குத் தெரியாது என விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுகளை வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் என வும் எச்சரித்துள்ளார். இவரின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version