ஒருகாலத்தில் தொடர்ச்சியாக தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த பெருமைக்கு உரியவர் சங்கவி. இப்போது கொளஞ்சி படத்தில் அம்மா பாத்திரத்தில் ரீ எண்ட்ரி ஆகியிருக்கிறார். விஜய்படம் என்றாலே ஒருகாலத்தில் சங்கவி தான் ஹீரோயின். இப்போது சங்கவி என்ன செய்கிறார்?
இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். விஜயோடு அதிகப்படங்களில் நடித்திருந்தாலும், அஜித் நடித்த அமராவதிதான் சங்கவியின் முதல்படம். அன்றையகால முண்ணனி நடிகர்கள் அனைவரோடும் நடித்திருக்கும் சங்கவி சின்னத்திரையையும் விட்டுவைக்கவில்லை. சில தொடர்களில் நடித்திருந்தார்.
கடந்த 2016ல் பெங்களூரைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற தொழிலதிபரை தன் 36வது வயதில் கல்யாணம் செய்தார். திருமணத்துக்குப்பின் நடிப்பை குறைத்துக்கொண்டவர் முழுநேர குடும்பஸ்திரியாக மிளிர்ந்தார். 42வது வயதில் பெண் குழந்தைக்கு தாயாக இருக்கும் நடிகை சங்கவி, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்ப புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் வியந்து பார்த்து ரசிக்கின்றனர் .புகைப்பட இணைப்பு கீழே…
pic1
pic2
pic3